Freelancer / 2023 நவம்பர் 28 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக ஹட்டன் கல்வி வலய கோட்டம் மூன்றில் இயங்கும் மஸ்கெலிய மாமா/ஹவ் மொக்கா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவுக்கு செல்லும் பாதையில் பாரிய மண் மேடு சரிந்து சுமார் இருபது அடி வரை மண் குவிந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு வேறு பாதை இல்லாத காரணமாக அந்தப் பாதையிலேயே செல்வதால் அவர்களின் உடைகள் சகதி படிந்து விடுவதாகவும் சில மாணவர்கள் குறித்த பாதையில் செல்ல முடியாத நிலையில், தடுமாறி விழுந்து பாடசாலை செல்ல முடியாமல் வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், அவ்வழியே தமது அன்றாட பணிக்காக. செல்லும் பிரதேச மக்களும் மாற்றுப் பாதையின்றி பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
53 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago