2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

வெற்றிடங்களை நிரப்ப அரவிந்தகுமார் ஆலோசனை

R.Maheshwary   / 2022 ஜனவரி 04 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

அரசாங்கத்தால் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்புக்கள் வழங்கப்பட்ட போதிலும், அவர்களில் பலர் அரச தொழில் வாய்ப்புக்களை நிராகரித்து விட்டு, வெளியேறியுள்ளனர். அவ் வகையில், ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே, மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அக்கடிதத்தில், ' கடந்த இரு வருடங்களுக்கு முன் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்ப்புக்களை வழங்கியது.   ஆனால், அவர்களில் பலர் அரச தொழில் வாய்ப்புக்களை நிராகரித்துள்ளனர். அந்நிலையில், ஏற்பட்ட வெற்றிடங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லையென்று அறிகின்றேன்.

2020ஆம் ஆண்டு ஜனவரி முதல், ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய பட்டதாரிகள் பலர் இருக்கின்றனர். அவர்களில் சிலர், 50 ஆயிரம் பட்டதாரிகளின் அரச நியமனங்களை நிராகரித்த வெற்றிடங்களுக்கு, தம்மை நியமிக்கும்படி கேட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வருகின்ற போதிலும், அவர்களின் அரச சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, போதிய தமிழ் அரச உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை இருந்து வருவதினால், தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை  எதிர்கொண்டுள்ளனர்.

ஆகையினால், பட்டதாரிகளுக்கான அரச நியமனங்களில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களுக்கு தமிழ்ப்பட்டதாரி இளைஞர், யுவதிகளை நியமிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் அதேவேளை, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மொழி புரியாத பிரச்சினைகளுக்கும்,  தீர்வுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

ஆகவே இது விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X