Janu / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறணை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக அக்குறணை நகரை அண்மித்து ஓடும் பிங்கா ஓயா ஞாயிற்றுக்கிழமை (08) பெருக்கெடுத்ததில் அக்குறணை நகர பிரதேசம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கியது
அக்குறணை நகரின் சியா வைத்தியசாலை சந்தியில் சுமார் இரண்டு அடி உயரம் வரையும் நகரின் ஏனைய பகுதிகளில் சுமார் ஒரு உயரம் அடி வரையும் வெள்ளநீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்
அக்குறணை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் வருடாவருடம் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ச்சியாக பொருளாதார இழப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அக்குறணை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
56 minute ago
1 hours ago