2025 மே 15, வியாழக்கிழமை

வேட்பாளர்களை வீழ்த்தும் செயல்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்து அதற்கான வேட்புமனுவும் தாக்கல் செய்து,  வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், தேர்தல் நடக்காது  என அறிவிப்பதானது வேட்பாளர்களை பொருளாதார ரீதியில் வீழ்த்தும் செய்லென என  தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடன் கொட்டகலையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல் நடத்தப்படும் திகதியை அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்பே அறிவித்ததாகத் தெரிவித்த திகாம்பரம், அதற்கமைய தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டதும் தேர்தலுக்கு பயந்த அரசாங்கம் தேர்தலை நடத்த பணம் இல்லையென அறிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றால் அரசாங்கம் பலத்த தோல்வியடையும் என்றும் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி பெறும் பாரிய வெற்றியடையும் என தெரிந்துக்கொண்டே அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருக்க தீர்மானித்துள்ளதென்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலை பிற்போட நடவடிக்கை எடுத்து விட்டு ஊடகங்களுக்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவிப்பது நகைப்புக்குரிய விடயம் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .