Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
R.Maheshwary / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாடுகள் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்திற்குள் தன்னை தாக்கியதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தான் ஒரு தேவைக்காக பொலிஸ் நிலையத்தக்குச் சென்ற போது, பொறுப்பதிகாரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகன- ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இவர், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக அம்பிட்டிய –மல்பான வட்டார வேட்பாளராக போட்டியிடுவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முறைப்பாட்டாளர் மற்றுமொரு முறைப்பாட்டாளரின் உதவிக்கு வந்தபோது, விசாரணைக்கு இடையூறாக இருந்ததால், சிறு முறைப்பாடுகள் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், உதவி பொலிஸ் அதிகாரி சி. டி. இளங்கோர்ன் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
1 hours ago
14 May 2025