2025 மே 17, சனிக்கிழமை

“வேலுகுமார் எம்.பி எங்களில் ஒருவர்”

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 11 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார்  என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயலாற்றும் குளோபல் கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், பிரதம அதிதியாக கலந்து கொண்ட பின், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தமிழ் முற்போக்கு கூட்டணியில் தற்போது உள்ள ஐவரும் பஞ்ச பாண்டவர்கள்போல் அண்ணன் தம்பிமார். எங்களுக்குள் ஏற்படும் சிற்சில பிரச்சினை அண்ணன், தம்பிமாருக்கிடையில் ஏற்படும் குடும்ப பிரச்சினைபோன்றுதான். அதனை நாம் எங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்வோம்.  அந்த வகையில் இப்பிரச்சினையும் விரைவில் தீரும் இணைந்து பயணிப்போம். ஜனநாயக கட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள்தான் அமைப்பை சரியாக வழிநடத்த உந்துசக்தியாக அமையும். நாரதர் கலகம் நன்மையிலேயே முடியும் என்பார்கள். இந்த ஆரோக்கியமான சண்டையும் நன்மையில் முடிவும் என்றே நம்புகின்றேன்.

எனவே, தான் எடுத்த முடிவு சம்பந்தமாக வேலுகுமார் எமக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கின்றோம். அவர் அரசு பக்கம் செல்லமாட்டார் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .