R.Maheshwary / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக்க
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் திங்கட்கிழமை (23) நான்கு மணித்தியாலங்கள் கடமைகளிலிருந்து விலகிச் சென்றமையினால் வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் காணப்படும் மருந்து, உபகரண தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கவும், கட்டண வார்டுகளை உருவாக்குவதை நிறுத்தவும் பணியாளர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உதவியாளர்கள் கடமைகளிலிருந்து விலகியிருந்தனர்.
இந்த சுகாதார உதவியாளர்கள் நேற்று (23) காலை எட்டு மணிக்கு கையெழுத்து பதிந்து விட்டு, கடமைகளிலிருந்து விலகிச் சென்றனர்.
இதனால் வைத்தியசாலையின் வெளிநோயாளர்களும்,கிளினிக்குகளுக்கு மாதாந்தம் வருபவர்களும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இது தொடர்பில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியிடம் கேட்ட போது,
இந்த நடவடிக்கையில் சுமார் 322 சுகாதார உதவியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், திடீர் சிகிச்சையாளர்கள் மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு எவ்வித சிரமங்களும் இன்றி சிகிச்சைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jan 2026