2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வைத்தியர்களை நியமிக்கவும் இராஜாங்க அமைச்சர் அவசரக்கடிதம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 27 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பசறை-  மெட்டிகாதன்னை கிராமிய வைத்தியசாலைக்கு தேவைahd வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறு,கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், ஊவா மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து  அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது  கொக்காகலை, பட்டாவத்தை, கல்லுள்ளை, டூமோ, போன்ற பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமங்கள் பலவற்றுக்கு மத்தியில் மெட்டிகாதன்னை கிராமிய வைத்தியசாலை அமைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான தமிழ்,சிங்கள மக்களின் சுகாதார சேவைகள் இவ் வைத்தியசாலை ஊடாகவே பூர்த்தி செய்யப்படும் நிலையில்,இவ் வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு நான்கு வார்டுகளும் உள்ளன. 

ஆனால் ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையில் ஈடுபடுவதாகவும் எனவே, இவ் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கைக்கமைய தேவையான வைத்தியர்கள்  கடமைகளில் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களை , உடன் நியமிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .