2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Sudharshini   / 2015 நவம்பர் 15 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே. புஸ்பராஜ்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளின் சாரதி, முச்சக்கரவண்டியில் மோதி, பஸ்ஸின் சில்லில் நசுங்குண்டு உயிரிழந்துள்ளார்;.

இந்த சம்பவம் சனிக்கிழமை காலை 11.30க்கு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளொன்று ராகலை பிரதான வீதியில் சமர்ஹில் எனுமிடத்தில் வைத்து முன்னால் சென்றுகொண்டிருந்த பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. இதன்போது எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் அந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் சாரதி, பின்னால் வந்த தனியார் பஸ்ஸின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பதுளையைச் சேர்ந்த ரவிந்து மிச்சக ரத்நாயக்க (வயது 26) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து பஸ்ஸின் சாரதியை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .