R.Maheshwary / 2022 ஏப்ரல் 06 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் நகருக்கு பல நாட்களாக லிட்ரோ சமையல் எரிவாயு கிடைக்காமை காரணமாக, நகரிலுள்ள உணவகங்கள் பல மூடப்பட்டுள்ளன.
கடந்த பத்து நாள்களாக ஹட்டன் நகரிலுள்ள எரிவாய முகவர் நிலையங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படவில்லை என முகவர் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அதிகாலையிலிருந்தே தினமும் நுகர்வோர் சமையல் எரிவாயு கொள்வனவுக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றும் சமையல் எரிவாயு முகவர் நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில் நுகர்வோர் காத்திருந்தாலும் பகல் 12 மணிவரை சமையல் எரிவாயு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
4 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Jan 2026