R.Maheshwary / 2022 மே 24 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
ஹட்டன் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள்களின் தட்டுப்பாடு காரணமாக, அவற்றினை பதுக்கி கருப்புச் சந்தை வியாபாரத்தில் ஈடுப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களையும் தரகர்களையும் பயன்படுத்தி, பத்து அல்லது பதினைந்து சமையல் வரிவாயுகளை பெற்று, கூடிய விலைக்கு விற்பனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 8,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் சாதாரண மக்கள் தமக்கு தேவையான எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது குறித்து அரசாங்கம் கவனமெடுத்து, ஒரு குடும்பத்துக்கு ஒரு எரிவாயு பெற்றுக்கொள்ளும் வகையில் கிராம சேவகர் ஊடாகவோ அல்லது அரச பொறிமுறைக்கு அமையவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பொது மக்கள் கோருகின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago