R.Maheshwary / 2022 ஏப்ரல் 10 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஹட்டன் நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜித்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.
மேலும் குறித்த காலப்பகுதியில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதற்காக, சிலர் எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறு எரிபொருள்ளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவர் என எச்சரித்துள்ளார்.
எனவே, புத்தாண்டு காலத்தில் பிரதேசத்தில் அமைதியைக் கடைபிடிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவர் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026