R.Maheshwary / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பல்வேறு போதைப் பொருள்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற 15 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 15 இளைஞர்களும் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து ஹட்டன் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்றும் (25) , நேற்று முன்தினமும் (24) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20- 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், இவர்கள் கொழும்பு, காலி, அநுராதபுரம் மற்றும் குருநாகல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா, கஞ்சா கலந்து புகையிலைத்தூள் மற்றும் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுதலை செய்த நீதவான் நாளை மறுதினம் (28) நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
.
28 minute ago
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
6 hours ago
16 Jan 2026