2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனில் 24 பேர் கைது

R.Maheshwary   / 2022 நவம்பர் 06 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டனில் கடந்த 10 நாட்களாக  முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் விசேட சுற்றிவளைப்பின் போது 24 பேர் போதைப் பொருள்களுடன் கைதுசெய்யப்பட்டனர்.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் ஆலோசனைக்கு அமைய, ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜித அல்விஸின் மேற்பார்வையின் கீழ் இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் உள்ளிட்ட சகல பிரிவினரிதும் ஒத்துழைப்புடன் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதி, ஹட்டன் பஸ் தரிப்பிடம் உள்ளிட்ட இடங்களில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

வாகனங்களில் பயணித்தோர் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளில் பயணித்தோர் ஆகியோரை சோதனைக்கு உட்படுத்தும் வகையில், ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கை இன்றும் (06) தொடர்ந்தது.

 போதைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட 24 பேரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜித அல்விஸ் தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X