Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன், இரா.யோகேசன்
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில், நாடளாவிய ரீதியில் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சுற்றாடல் பாதுகாப்புக்காக, ஹட்டன் நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன் - டிக்கோயா நகரசபைத் தலைவர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, ஹட்டன் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு, நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹட்டன்-மல்லியப்பூ சந்திக்கு அருகில், புகையிரதப் பாதையை அணிமித்துள்ள பிரதான போக்குவரத்துப் பாதை அகலமாக்கப்பட்டு, பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டு புற்கள், பூக்கன்றுகள் நாட்டப்பட்டு வருவதாகவும் அதேபோல், நகரிலுள்ள முக்கியமான சுவர்களுக்கு வர்ணம் பூசப்பட்டு, அவற்றில் சித்திரங்கள் வரைந்து காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago