2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஹட்டன் நகர மக்களுக்கு அவசர அறிவிப்பு

R.Maheshwary   / 2022 மார்ச் 16 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்ஸ

மலையகத்தில் நிலவி வரும் வரட்சியுடனான காலநிலையால் குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பிரதான குளங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் ஹட்டன் நகருக்கு நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் மாத்திரமே நீர் விநியோகிக்கப்படும் என ஹட்டன் நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய,ஹட்டன் நீர்வழங்கல் சபையால் நீர் பெற்றுக்கொள்ளப்படும் சிங்கமலை நீர்த்தாங்கி மற்றும் ஒட்டரி  நீர்தாங்கிகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையே குறித்த நீர்மட்டுப்பாடுக்கு காரணம் என நீர்வழங்கல் சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனவே, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் விநியோகிக்கப்படும் நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் நீர்வழங்கல் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஹட்டன் நகர மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கையொன்று இன்று (16) ஒலிபெருக்கி மூலம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X