Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு, புதிய கட்டடம் ஒன்றை அமைக்கும் பொருட்டு, வருட
ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட 70இலட்சம் ரூபாய் நிதி, இதுவரை பயன்படுத்தப்படாது உள்ளதால், அந்தநிதியை
பெருந்தோட்டப் பாதை அபிவிருத்தி நிதியில் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொஸ்கோ கல்லூரி மட்டுமல்ல நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக, நான் ஒதுக்கும் நிதியை, பயன்படுத்தவிடாது மத்திய மாகாண சபையானது பல்வேறுத் தடைகளை ஏற்படுத்தி
வருகிறது. அதில் ஹட்டன் பொஸ்கோ கல்லூரி பிரதான இடம் வகிக்கிறது.
“இவ்வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பணிகளை தொடரவிடாது பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறன. இது குறித்து, ஹட்டன் வாழ் மக்களும் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரும், சம்பந்தப்பட்டவர்களிடம், ஏன் கேள்வி எழுப்பத் தயங்குகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.
“கல்லூரிக் காணியில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு ஒருபுறம் கத்தோலிக்க ஆலயத்தின் பங்குத் தந்தை
தடையாக உள்ளார். மறுபுறம் அரசியல்வாதிகள் தடைகளை ஏற்படுத்துகின்றனர். ஒன்று அபிவிருத்தியை செய்ய வேண்டும் அல்லது செய்பவர்களை செய்யவிட வேண்டும். இக்கல்லூரி மீதும் மாணவர்கள் மீதும் உண்மையான அக்கறைக்கொண்ட அரசியல்வாதிகளால் கடந்த காலங்களில், பத்து பேர்ச் நிலத்தையாவது பெற்றுக்கொடுக்க முடியாது போனது என கேள்விக் கேட்கிறேன்.
“எனவே, பொஸ்கோ கல்லூரியின் அபிவிருத்திக்காக, பயன்படுத்த முடியாது இருக்கும் அந்த நிதியை
கொட்டகலையிலுள்ள தோட்டப் பாதை அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு நான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரி சமூகத்தின் கோரிக்கைக்கு அமையவே, நான் இந்நிதியை
பெற்றுக்கொடுத்தேன். ஆனால், கட்டடம் அமைய, கல்லூரி சமூகமும்சரி ஏனையோரும் சரி எந்த
நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது புரிகிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago