Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான ஹந்தான பகுதியில், தேலைத் தோட்டமொன்றில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 7 முதல் 8 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதாக, ஹந்தான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தீ விபத்தில் தேயிலைச் செடிகளும் கருகிவிட்டன என்றும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
மேற்படிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் அழிப்பு தொடர்பில், சம்பந்தப்பட்டத் தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுச்செல்லப்படுவதாகவும் எனினும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்றும் அவ்வமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையிலேயே, நேற்று முன்தினம் இரவும் மேற்படித் தேயிலைத் தோட்டத்துக்கு தீமூட்டப்பட்டுள்ளதாக, அவ்வமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதஹேவாஹெட்டா பிரதேச செயலகப் பிரிவின் ரத்தமுல்லா, அலுபத்கடா, உதகம கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சுமார் 2000 முதல் 3000 குடும்பங்களின் குடிநீர் தேவைகளை இப்பகுதியில் உள்ள நீரூற்று ஆதாரங்கள் பூர்த்திசெய்கின்றன என்றும், இந்தப் பகுதியில் இதுபோன்ற சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டால், அந்த நீர் ஆதாரங்கள் மிக விரைவாக அழிவடைந்துவிடும் என்றும் அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago