2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஹப்புத்தளை, வெளிமடை வீதியில் மண் சரிவு

Freelancer   / 2023 நவம்பர் 06 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை, வெளிமடை பிரதான வீதியின்  வல்காவலை பகுதியில் பாரிய மண் சரிவு இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இதன்காரணமாக ஹப்புத்தளை -  வெளிமடை பிரதான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள்,  பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொது மக்கள் இணைந்து பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

மேலும் வாகன சாரதிகளை மாற்றுப் பாதையைப் பயன்படுத்தி போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.M

ஆறுமுகம் புவியரசன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X