2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

ஹரீன் அங்கே, நான் இங்கே : ஓரிடமே சிறந்ததாம்

R.Maheshwary   / 2022 ஜூன் 02 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ ஆளும் கட்சி அமைச்சராகவும்  சங்கத்தின் பொதுச்செயலாளராக  தான் எதிர்க்கட்சியிலும் இருந்து ஒன்றிணைந்து பயணிக்கும்போது, சங்கத்தின் முக்கிய முடிவுகள் தீர்மானங்கள் எடுக்கும் போது அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, ஹரீன் பெர்னாண்டோ மீண்டும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வரவேண்டும். அல்லது தான் அவர்களுடன் சென்று இணைய வேண்டும். எது எவ்வாறாக இருப்பினும் சங்கத்தினுடைய செயற்குழுவின் தீர்மானமே இறுதியானது என்றார்.

நேற்று (2) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

அரசியலோ அமைச்சுப்பதவிகளோ தனக்கு தேவையில்லை பெருந்தோட்ட மலையக மக்களின் சொத்தான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் பாதுகாக்கப்படவேண்டும். சங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் சரியாக அமைய வேண்டும் என தெரிவித்தார் .

 நாட்டினுடைய பொருளாதார சூழ்நிலையில் இன்னோரன்ன பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பது பெருந்தோட்ட மலையக மக்களே. ஆகவே இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிப் பொருட்களை அரசியல் தொழிற்சங்க பேதமின்றி பெருந்தோட்ட மலையக மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X