2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

சிறை கைதியொருவர், ஈசிகேஷ் முறையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாரென்றும், இதற்கு உடந்தையாக இருந்த மூவரை, நேற்றுக் கைதுசெய்துள்ளதாகவும், கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், கட்டுகஸ்தோட்டைக்கு உட்பட்ட பகுதியில், நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்திய பொலிஸார், ஹெரோய்னுடன் மூவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 1 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோய்னையும் கைப்பற்றியுள்ளனர்.

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் கைதி, சிறையிலிருந்து அலைபேசி மூலம் ஈசிகேஷ் முறையில் பணத்தை பெற்று, இந்த வியாபாரத்தை நடத்தி வந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ஹெரொய்னை கொள்வனவு செய்பவர் சிறை கைதிக்கு, ஈசிகேஷ் முறையில் பணத்தை அனுப்பியப் பின்னர், சிறை கைதி, வெளியே இருக்கும் தனது சகாக்களுக்கூடாக, ஹெரோய்னை விற்பனை செய்வதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், இந்த விவகாரம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .