2025 மே 17, சனிக்கிழமை

ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை வெற்றி

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 07 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவினரால் ஹொரண  பெருந்தோட்ட  நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடி க்கடிக்கை  வெற்றியளித்துள்ளது.

ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களுக்கு கடந்த காலங்களில் விஜயம் மேற்கொண்டிருந்த இ.தொ.காவின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் அங்கு தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் கெடுபிடிகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

பின்னர்இ ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்ததுடன், ஒரு கிலோ தேயிலைத்தூளை கூட வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

ஆகையால்இ இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்து பேச்சுவாரத்தைக்கு வந்தனர். இந்த பிரச்சினைகள் ஹட்டன் தொழில் திணைக்களத்தில் இன்று மேலதிக தொழில் ஆணையாளர் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவுக்கும், ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.

இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினர் சாதகமான பதில்களை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .