2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹோட்டலில் போதைப் பொருள் விற்பனை

R.Maheshwary   / 2022 நவம்பர் 15 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

போதைப் பொருள் வர்த்தகம், விநியோகம் என்பவற்றை முன்னெடுத்த போதைப் பொருள் மத்திய நிலையம் ஒன்று கம்பளை பொலிஸாரால் இன்று(15) காலை சுற்றிவளைக்கப்பட்டதுடன் 8 சந்தேகநபர்களும்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

31 வயதான ஹோட்டல் உரிமையாளரும் போதைப் ​பொருள்​கொள்வனவுக்கு வருகைத் தந்திரந்த 21 தொடக்கம் 42 வயதுக்கு இடைப்பட்ட 7 பேரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

எவருக்கும் இலகுவில் சந்தேகம் ஏற்படாத வகையில் ஹோட்டல் ஒன்று போல குறித்த இடம் நடத்திச் செல்லப்பட்டதாகவும் இந்த இடத்துக்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் அதிகமாக வந்து செல்கின்றமை தொடர்பில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்கு அமைய கம்பளை ஊழல், ஒழிப்பு பிரிவின் அதிககாரிகளால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஹோட்டலின் மேல் மாடியில் உள்ள 3 அறைகளில் இந்த போதைப் பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் நகரை அண்மித்த பகுதிகளைக் கண்காணிப்பிற்காக பல இரகசிய ஜன்னல்களும் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து அந்த ஹோட்டல் சுற்றிவளைக்கப்பட்டதுடன் இதன்போது பல்வேறு வகையான ​போதைப் பொருள்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1 இலட்சத்து 6ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பளை பொலிஸாரின் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் ஜெரி மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .