Kogilavani / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்
'சமாதான நகராக விளங்கும் ஹட்டன் நகரில் திருடர்களும் கொள்ளையர்களும் உள்ளனர். அவர்களை விரட்டி நகரத்தை தூய்மையாக்குவேன். மேலும் நுவரெலியா மாவட்டத்திலுள்ள நகரங்கள், தோட்டப்புரங்களை அபிவிருத்தி செய்து தொழில்வாய்புகளையும் காணி பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன' என நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.கே.பியதாஸ தெரிவித்தார்.
ஹட்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் கூறினார்.
இவர் 2002 ஆண்டு காலப்பகுதியில் நாடாளுமன்றத்துக்கு முதன்முதலில் தெரிவாகினார். அதன்பின் 2005 ஆண்டு முதல் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை, ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
'ஹட்டன் நகரை புதிய நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். ஹட்டன் நகரத்தை தூய்மையாக்குவேன்.
இதேவேளை, 'நுவரெலியா மாவட்டத்திலுள்ளவர்கள் எதிர்கொள்ளும் தொழிலாளர் பிரச்சினைகளையும் காணி பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதுடன் ஹட்டன் பகுதியில் முஸ்லிம் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பேன்' என்றும் அவர் கூறினார்.
'நுவரெலியா மாவட்டத்தில் சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றிபெற முடியாது. பிரதேச தமிழ்,முஸ்லிம் மக்களின் வாக்குகளும் கிடைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். என்னை வெற்றி வாகை சூடி நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய அனைவருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன்' என்றார்.



48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
53 minute ago