R.Maheshwary / 2022 மே 18 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நான்கு மாதத்தில் 12 இலட்ச ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக நுவரெலியா பாதுகாப்பு நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
106 வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா, வலப்பனை, ஹட்டன், நாவலப்பிட்டிய ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு இந்த தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காகவே வர்த்தகர்கள் மீது வழங்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அந்த அதிகாரி தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்றார்.
அதிலும் குறிப்பாக தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சில வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. எனவே அதிகார சபை என்ற வகையில் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படுகின்றோம்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 106 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்கின்ற சில்லரை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராகவே அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவசாயத்திற்காக பாவிக்கப்படுகின்ற உரம் கிருமிநாசினிகளை விற்பனை செய்கின்ற வியாபாரிகள் மருந்தகங்கள் எரிவாயு விற்பனையாளர்கள் போன்ற வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் 106 வர்த்தகர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூலமாக, 12 இலட்ச ரூபாய் தண்டப்பணமாக அறிவிடப்பட்டதுடன் 5,32789 ரூபாய் அரச நிதியாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே நாம் தொடர்ச்சியாக சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றோம். இது தொடர்பான முறைபாடுகளை 052-2223933 என்று இலக்கம் அல்லது அவசர அழைப்பான 1977 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ தகவல்களை வழங்க முடியும் என நுவரெலியா பாதுகாப்பு நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரி தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago