R.Maheshwary / 2022 ஜனவரி 18 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் இன்று (18) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரொசல்ல- பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 12 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மாணவர்களின் உடல் நிலையில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மலையகத்தில் காணப்படும் கடும் வெயிலுடனான வானிலையால் மாணவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என்று அதிபர் தெரிவித்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 8 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .