Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Janu / 2023 நவம்பர் 22 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை – கோணக்கலை, காவத்த தோட்டத்தில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்த நபரை விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பசறை கோணக்கலை காவத்தை தோட்டத்திலதை சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் பணிபுரியும் சந்தேக நபர், குறித்த மாணவன் கடைக்கு சென்று வீடு திரும்புகையில் மாணவனை தனது வாகனத்தை பழுது பார்க்கு இடத்துக்கு அழைத்து சென்று அவருக்கு பலவந்தமாக மது அருந்த கொடுத்து கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் குறித்த மாணவன் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பசறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் துலித் டி சில்வா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M பியரட்ணவின் மேற்பார்வையிலன் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராமு தனராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
33 minute ago
2 hours ago
3 hours ago