2025 மே 15, வியாழக்கிழமை

135 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 14 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

உள்ளூராட்சி தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்புக்காக பதுளை கல்வி வலய அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களில் 135 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உரிய ​நேரத்தில் அவை முன்வைக்கப்படாமையே நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் என பதுளை உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், முகாமைத்துவ சேவைகள் சங்கம் மற்றும் பட்டதாரிகள் சங்கம் ஆகியன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு மற்றும் பதுளை உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு இந்த தபால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மூன்று முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின்  பதுளை மாநகர சபை உறுப்பினரும் பதுளை மாநகர சபை வேட்பாளருமான நந்தன ஹபுகொட தெரிவித்தார்.

வலயக் கல்வி அலுவலக ஊழியர்கள் உரிய நேரத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த போதிலும் வலயக் கல்விப் பணிப்பாளர் உரிய நேரத்தில் பதுளை தேர்தல் காரியாலயத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என ஹப்புகொட மேலும் தெரிவித்தார்.

இதன்காரணமாக இது தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு முறைப்பாடுகளில்  கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .