2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

1500 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்ததில் இருவர் பலி

R.Maheshwary   / 2022 மார்ச் 15 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். யோகா

 தெல்தோட்டை - பட்டியகம மேல்பிரிவு பிரதேசத்தில்,  ஜீப் ஒன்று நேற்று இரவு (14)  1,500 அடி பள்ளத்தில் பாய்ந்த்தால், இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜீப்பின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தெல்தோட்டை -பட்டியகம மேல்பிரிவு பிரதேசத்தில் மலையுச்சியில் உள்ள  தனியார் தொலைத்தொடர்பு கோபுரத்தின் புனரமைப்பு பணிகளுக்காக சென்ற இருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

64 மற்றும் 35 வயதான இருவரும் கம்பளை, கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே குறித்த இருவரும் உயிரிழந்த நிலையில், விபத்துக்குள்ளான வாகனத்திலேயே உயிரிழந்த இருவரின் உடல்கள் இறுகியுள்ளது.

இதனையடுத்து கலஹா பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து கடும் சிரமத்தின் மத்தியில் சடலங்களை  மேலே கொண்டு வந்துள்ளனர்.

சடலங்கள் பேராதனை  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X