2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

18ஆம் வளைவு பகுதியில் மண்மேடு சரிந்தது

R.Maheshwary   / 2023 ஜனவரி 08 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

இன்று (8​) காலை மஹியங்கனை வீதியின் 18ஆம் வளைவுப் பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த வீதியின் 14 மற்றும் 15ஆம் வளைவுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது என்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது மண்மேட்டை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த வீதியைப் பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் பயன்படுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .