2025 மே 05, திங்கட்கிழமை

19 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

Kogilavani   / 2020 நவம்பர் 27 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் கல்வி வலயம், குயில்வத்தைப் பகுதியில் தொற்றுக்குள்ளான உயர்தர வகுப்பு மாணவனுடன் தொடர்பைப் பேணிய 19 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, அம்பகமுவ பொது சுகாதர பரிசோதகர்கள் தெரிவித்தனர் 

தொற்றுக்குள்ளான மாணவன், மாத்தறை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு நேற்று (26) அழைத்துச் செல்லப்பட்டார். 

இந்நிலையில் அந்த மாணவனுடன் தொடர்பைப் பேணிய 19 மாணவர்கள் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார். 

குறித்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கை முற்றாக ஸ்தம்பித்தம் அடைந்துள்ளதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் 30 பேரில் நான்கு பேர் மாத்திரமே பாடசாலைக்கு  வருகைத் தந்துள்ளனர்.  

மேலும்  கல்வி பயிலும்  406 மாணவர்களில் ஒருவர் கூட பாசாலைக்கு  சமூகளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.  பாடசாலை வளாகம், வகுப்பறைகள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X