2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

200 படிகள் ஏறியும் நீரின்றி அவதி

R.Maheshwary   / 2023 ஜனவரி 25 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை பன்சல கொலனி  மக்கள்  ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறிய இறங்குகின்ற போதிலும் நீரில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

 இக்கொலனியில்  46  குடும்பங்களைச் சேர்ந்த 260 இற்கு அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் குடிநீர் பிரச்சனையை எதிர் கொண்டு வருவதுடன், பிரதேச சபை ஊடாக வாரத்துக்கு ஒரு முறை சிறிய நீர் தாங்கியில் நீர்  நிரப்பி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

 மலையகத்தை பொருத்தவரையில் நீர் வளம் காணப்பட்ட போதிலும் இம்மக்களுக்கு நீரை பெற்றுக் கொள்வது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

இம்மக்களின் நலன் கருதி ,சிரமம் இல்லாமல் குடிநீரை பெற்றுக் கொள்ளும் வகையில் நீர் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இக்கொலனியில் வாழும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .