2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; மரக்கறி விலைகள் அதிகரிக்கலாம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் இந்த மாவட்டத்தில் விவிசாயப்பயிர்ச் செய்கை பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்படுகின்றது.

இவ்வாறு தொடர்ச்சியான மழை வீழ்ச்சி தொடருமானால் நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவா, போஞ்சி, கரட், பீட்றூட், லீக்ஸ் போன்ற மரக்கறி வகைகளின் விலைகள் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கலாமென நுவரெலியா மாவட்ட மரக்கறி வியாபாரிகள் எதிர்வு கூருகின்றனர்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவை, மஸ்கெலியா, அக்கரப்பத்தனை போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .