Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் காமினி விஜயமுனி சொய்சா இன்று திங்கட்கிழமை காலை பதுளை சிறைச்சாலைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். பதுளை சிறைச்சாலைக்கு வருகை தந்த பிரதி அமைச்சரை பதுளை நகர மத்தியில் இருந்து சிறைச்சாலை வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சிறைக்காவலர்களால் அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.
இதன் போது பதுளை சிறைச்சாலை அதிகாரி அனுர ஏக்கநாயக்க மற்றும் பிரதான ஜெயிலர் செனரத் பண்டார, நலன்புரிச் சங்கத் தலைவர் எ.எச்.எம்.ஜாபிர் உள்ளிட்டவர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பதுளை மாகாண சபைத் தலைவர் உபாலி நிஸ்ஸங்க குணசேகர உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
பதுளை சிறைச்சாலைக்கு வருகைத் தந்த பிரதி அமைச்சர், கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை ஆராய்ந்ததோடு சிறைச்சாலை நடவடிக்கைகளையும் பார்வையிட்டார். இதன்போது யூ.என்.டீ.பி மூலம் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களையும் சிறைச்சாலை கைதிகளின் நலனுக்காக ஒப்படைத்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவிற்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுவதையும் சிறைச்சாலைக்குள் நலன்புரி நடவடிக்கைகளைப் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
22 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
54 minute ago