2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வல்லுறவு தொடர்பாக தேடப்பட்டவர் தற்கொலை

Super User   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கண்டி ரிஃபா)

கண்டி கலேவெல பிதேசத்தில், சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளதாக கலேவல பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

கலேவெல பொலிஸ் பிரதேசத்தில் கடந்த வாரம் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 22 வயதான  இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் தேடி வந்தனர்.

குறித்த இளைஞர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் தற்கொலை கொண்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று புதன்கிழமை இரவு பொலிஸார் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்றபோது அவ்விளைஞர் வீட்டின் அறையொன்றில்  கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.
இது தொடர்பாக கலேவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


  Comments - 0

  • Niththi Thursday, 14 October 2010 07:34 PM

    வல்லுறவு குற்றத்தற்காக தனக்குத்தானே தண்டனையா?

    Reply : 0       0

    xlntgson Thursday, 14 October 2010 09:43 PM

    தனக்கு தானே தண்டனை வழங்கி கொண்டதாக கூறமுடியாது. இது கோழைத்தனம். இவர் சரணடைந்து இருந்தால் ஒன்றும் நடந்து இருக்காது. சட்டத்தில் 1000 ஓட்டை இருக்கிறது. ஆனால் தற்கொலை செய்து கொண்டது சுலபமான வழி என்று நினைத்தால் கொலைகள் பல செய்து தன்னையும் மாய்த்துக்கொண்டால் சகல சட்டங்களிலிருந்தும் தப்பிவிடலாம். ஆனால் இறப்புக்கு பின் கேள்வி கணக்கு இல்லாமல் இல்லை. சொர்க்க நரகமோ, முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும் என்ற இலக்கணப்படி ஊழ்வினையோ அல்லது வாரிசுகளையும் சூழலில் வாழும் அனைவரையும் பாதிக்கும் வண்ணமோ அவர்கள் வேகுவர்!

    Reply : 0       0

    Abuazaath Thursday, 14 October 2010 11:37 PM

    இப்படி ஒரு கிராமம் கண்டி இல் இல்லை .ஆனால் மாத்தளை மாவட்டம் தம்புள்ள இல் உண்டு. வாசகரை எமற்றவேண்டாம் .

    Reply : 0       0

    xlntgson Tuesday, 19 October 2010 10:20 PM

    அபுஆஜாத் உங்களது கருத்து பாரதூரமானது, நீங்கள் இதற்காக மீடியா கௌன்சிலில் முறைப்படலாம். பிரஸ் கம்ப்ளைன்ட் கவுன்சில். pcclk

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .