2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கொட்டகலையில் எண்ணெய் பவுஸர் குடைசாய்ந்தது

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கமலி


கொழும்பு, முத்துராஜவெல எண்ணெய் களஞ்சியசாலையிலிருந்து கொட்டகலை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எண்ணெய் ஏற்றிவந்த பவுஸர் ஒன்று, கொட்டகலை நகரில் அமைந்துள்ள நுவரெலியா பிரதேச சபை காரியாலயத்துக்கு அருகில் குடைசாய்ந்துள்ளது.

இதனால், நுவரெலியா - ஹட்டன் பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது. தற்போது போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தடம்புரண்ட பவுஸரிலிருந்து டீசல் வெளியேறி வருகின்ற நிலையில், கொட்டகலை களுங்சியசாலை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் எண்ணெய் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பவுஸரில் 33 ஆயிரம் லீற்றர் டீசல் இருந்ததாகவும் பவுஸரை திருப்ப முயன்ற நிலையிலேயே அது குடைசாய்ந்ததாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .