2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

புதையல் தோண்டிய தந்தையும் மகனும் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை, ஹல்ஒழுவ பிரதேசத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும்  தந்தை ஒருவரையும் அவரது மகன் ஒருவரையும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரின் மனைவி வீட்டின் முன்புறத்தில் புதையல்  இருப்பதாகவும் அதனை தோண்டி எடுக்குமாறும் கனவு கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து  வீட்டின் முன்புறத்தில் குடிசை ஒன்றை அமைத்து அதனை முற்றாக மறைத்து இரகசியமாக தந்தையும் மகனும் புதையல் தோண்டியுள்ளனர்.

இந்த நிலையில், 12 அடி ஆழத்தில் குழி ஒன்று தோண்டியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேற்படி இருவரையும் நேற்று சனிக்கிழமை கைதுசெய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .