2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பஸ் மிதிபலகையிலிருந்து விழுந்து ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 05 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}



-க.கிஷாந்தன்

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியின் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஹட்டன் பஸ் நிலையத்தில் வைத்தே இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பஸ்களுக்கு பயணிகளை சேர்க்கும் ஒருவரே  இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபரை டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவரின் நிலைமை மோசமாக இருப்பதனால் அவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து பஸ் சாரதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவித்த ஹட்டன பொலிஸார் அவரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .