2021 மே 08, சனிக்கிழமை

குழு மோதலில் இருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

தலவாக்கலை நகரில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில், இருவர் படுகாயமடைந்து லிந்துலை மற்றும் கொட்டக்கலை வைத்தியசாலைகளில் ஞாயிற்றுக்கிழமை (19) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 20 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விரு குழுவினரும் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்கள் என்றும் ஒருகட்சியினால் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையை மற்றொரு கட்சியின் ஆதரவாளர்கள் பலவந்தமாக அகற்றிமையை அடுத்தே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X