2021 ஜூன் 17, வியாழக்கிழமை

தெதுருஓயாவில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் பிரதேசத்தில் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவரின் சடலத்தை தெதுருஓயாவிலிருந்து கடற்படையினர் இன்று காலை  மீட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாபிட்டிய பிரதேச பாடசாலையை சேர்ந்த 17 வயது மாணவனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை காணமால் போனதாக கூறப்படும் கும்புக்கெடே பிரதேசத்தைச்சேர்ந்த பாடசாலை மாணவியின் சடலத்தை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி இருவரும் நேற்று புதன்கிழமை மாலை காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .