2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லுரிக்கான தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரிக்கான தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் திருமதி ரவிசந்திரிகா தலைமையில் திங்கட்கிழமை (06) நடைபெற்றது.

இதன்போது, பிரதம அதிதியாக வருகை தந்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனனை பிரதி அதிபர் சந்திரமோகன் மலை அணிவித்து வரவேற்றதுடன்  பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய மரியாதையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.இராஜரட்ணம், பாடசாலையின் அதிபர், கம்பளை கல்வி வளைய கோட்ட கல்வி பனிப்பாளர் திருமதி துஸ்யந்தி பெரியசாமி ஆகியோர் தொழில்நுட்பக் கூடங்களை திறந்து வைத்தனர்.

பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் வேறு பாடசாலை அதிபர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X