2025 ஜூலை 17, வியாழக்கிழமை

30ஆவது முறையும் நடத்தப்படும் கேகாலை வசந்தகால நிகழ்வு

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 30ஆவது ஆண்டாகவும் நடத்தப்படவுள்ள கேகாலை வசந்தகால நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி கேகாலை நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சப்ரகமுவ மாகாண சபை, கேகாலை மாவட்ட செயலகம், கேகாலை பொலிஸ் நிலையம், சப்ரகமுவ மாகாண அபிவிருத்தி நிர்மாண மற்றும் இயந்திர உபகரண அதிகார சபை, மஹிபால ஹேரத் ஜனசாஹன அமைப்பு என்பன இணைந்து மேற்படி வசந்தகால நிகழ்வை வருடந்தோரும் நடாத்தி வருகின்றது.

மேற்படி வசந்தகால நிகழ்வில் யானை ஓட்டப்போட்டி, முச்சக்கர வண்டி ஓட்டுதல் போட்டி, ஆண், பெண் ஓட்டப்போட்டி, அழகுராணி போட்டி உட்பட 37க்கும் அதிகமான போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X