Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயகக்கட்சியின் வாக்குகள் கிடைக்காது இருந்திருந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு இலட்ச வாக்குகளில் வெற்றி பெருவதற்கு பதிலாக பத்து இலட்ச வாக்குகளில் தோல்வியடைந்திருப்பார் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கண்டி, கட்டுகஸ்தோட்டை பௌத்த மண்டபத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
'எமது நாட்டுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பாதிப்பை ஒரு போதும் நிவர்த்தி செய்ய முடியாது. நாட்டை காக்கும் தேவதைகளே, இந்த பிடியிலிருந்து நாட்டை காப்பாற்றினர். அதற்கு பங்குதாரர்களாக இருக்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
மஹிந்த ராஜபக்ஷ மூன்று முறை ஜனாதிபத் தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர் ஒரு முறையேனும் வெற்றி பெறவில்லை. 2005ஆம் ஆண்டு வடக்கு மக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை இல்லாமலாக்கியதன் காரணமாக வெற்றி பெற்றார். 2010ஆம் ஆண்டு என்னுடன் போட்டியிட்டு எனது வெற்றி கொள்ளையடிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு அவர் தோல்வியடைந்து விட்டார்.
எனவே ஜனாதிபதியின் வெற்றியில் எமக்கு பாரிய பங்கு உண்டு. இருந்த போதும் தற்போதைய அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமத நிலையால் மக்கள் தோல்விக்குள்ளாகுகின்றனர். நாம் மக்களின் பக்கமே இருக்கின்றோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். 19ஆம் திருத்தச்சட்ட மூலத்தை முன் வைத்து மக்களின் பிரச்சினைகளை பின் போட முடியாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்த மக்களை இன, மத ரீதியில் பேதமடைய செய்வதற்காக பல சேனாக்கள் உருவாகின. ஆனாலும் நாட்டை பாதுகாக்கும் தேவதைகள் நாட்டை பாதுகாத்தன.
ஜனநாயக்கட்சிக்கு நாட்டில் தற்போது ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. அது இன்னும் அதிகரிக்கும். எதிர்வரும் தேர்தலின் போது, எங்களுக்கு குறைந்தது 24 ஆசனங்களை வென்றெடுக்க முடியும். நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத்தில் பலம் வாய்ந்த சக்தியாக மாருவோம்' என்று தெரிவித்தார்.
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago