2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கேம்ரிட்ஜ் கல்லூரியில் 68 மாணவர்கள் சித்தி

Kogilavani   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு வெளியாகிய க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 68 மாணவர்களில் 66 பேர் கணித பாடத்துடன் க.பொ.த.உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனதாக பாடசாலையின் அதிபர் ஈ.லோகநாதன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இம்முறை 97 வீதமாக பாடசாலையில் பெறுபேறு உயர்வடைந்துள்ளது. பி.டோகிதா 9ஏ, கே.பிரதீப் 8ஏ,1பி, ஐரின் யெலோனி 6ஏ,2பி,2சி, டிலானி ரூத் 6ஏ,1பி,1சி,1எஸ், எல்.சதீஸ்தீபன் 6ஏ,1பி,1சி,1எஸ் அடங்கலாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

இந்து சமயம், கத்தோலிக்கம், தமிழ், வர்த்தகம், குடியியல், சிங்களம், சித்திரம், சங்கீதம், நடனம், தகவல் தொழில்நுட்பம்,  சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய பாடங்களில் நூறு வீத பெறுபேறும் ஆங்கிலம் 90வீதம், விஞ்ஞானம், கணிதம், வரலாறு, விவசாய பாடங்களில் 97 வீதமும் தமிழ் இலக்கியம் 96 வீதமும் பெறுபேறுகள் பெறப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X