Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 11 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
நோட்டன் ஓஸ்போன் கீழ் பிரிவில் வாழும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சீறான குடி நீர் வசதிகளின்றி அசொளகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் ஒஸ்போன் தமிழ் வித்தியாலயத்துக்கும் தாங்கியொன்றினூடாகவே நீர் விநியோகிக்கபடுகின்றது.
பொகவந்தலாவ கம்பனிக்குட்;பட்ட மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு தோட்ட வனப்பகுதியிலிருந்து பாரிய நீர்தாங்கியினுடாக நீர் சேகரிக்கபட்டு நீர் விநியோகம் மேற்கொள்ளபடுகின்ற போதிலும் குறித்த நீர் தாங்கியானது மேல் மூடி இல்லாத நிலையில் காணப்படுவதுடன், மழை காலங்களில் கழிவுகள் நிறைந்தும் பன்றி, பாம்பு, தவளை போன்ற விலங்குகள் நீர் தாங்கியில் தவறி விழந்த பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் குறித்த நீரினை பருகும் போது கிருமிகள் தொற்றும் நிலை ஏற்பட்டு நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தமது தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு காலையில் தாம் கடமைகளுக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் நீர் தங்கிக்கான மேல் மூடியை அமைக்குமாறு தோட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த போதும் இது வரையில் மாற்று நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கும் ஒஸ்போன் கீழ் பிரிவு மக்கள், சம்பந்தபடட அதிகாரிகள் சுத்தமான நீரை பருக நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்
இது தொடர்பில் தோட்ட வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமது நிர்வாகத்துக்கு இது வரையில் எவ்வித முறைபாடும் தெரிவிக்கவில்லை என்றும் மாத சம்பளம் வழங்கி குறித்த நீர் தாங்கியை தினம் தோரும் பராமரித்து வருவதாகவும் எதிர்காலத்தில் பொதுமக்களின் சுகாதாரம் நலன் கருதி நீர்தாங்கிக்கான மேல் முடியை அமைப்பதறகான நடவடிக்கைக்கு தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடுவதாக தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago