2025 ஜூலை 16, புதன்கிழமை

ஒன் எரைவல் விசாவை பெற்றுகொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

Kogilavani   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டின் திருச்சி, மதுரை விமான நிலையங்களிலும் ஒன் எரைவல் விசா பெற்றுக்கொள்வதற்குரிய வசதிகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.சின்காவிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது விசா தொடர்பான உறுதிமொழியை வழங்கினார். அதன் அடிப்படையில் இலங்கைக்கும் இந்திய விமான நிலையங்களில் ஒன் எரைவல் விசா பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே விசாவை பெற்றுக்கொள்ளமுடியும்.

ஏலவே 43 நாடுகளுக்கு ஒன்எரைவல் விசா வாய்ப்பை வழங்கியுள்ள இந்தியா 44 வது நாடாக இலங்கையை அந்த பட்டியலில் அறிவித்துள்ளது.

அதன்படி இந்தியாவின் புதுடில்லி, மும்பை, சென்னை, கல்கத்தா, அய்தராபாத், பெங்களுர், திருவனந்தபுரம், கொச்சின், கோவா ஆகிய விமான நிலையங்களில் இலங்கையர் 30 நாட்களுக்குரிய விசாவை பெற்றுக்கொள்ளமுடியும்.

இருந்தபோதும் தமிழ்நாட்டின் சென்னை தவிர்ந்த மதுரை திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இந்த வாய்ப்பு இல்லை.
எனவே இலங்கை தமிழர்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்கள் உறவுகளை பார்ப்பதற்காகவும் அடிக்கடி தமிழ் நாட்டுக்;கு செல்கின்றனர்.

அதிகளவு சுற்றுலாவுக்காகவும் வர்த்தக வைத்திய மற்றும் பல்வேறு தேவைகளுக்காகவும் சென்று வருகின்றனர்.

எனவே, திருச்சி மதுரை விமான நிலையங்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் இதுகுறித்து பரிசீலிப்பதாக இந்திய தூதுவர் கூறியதாகவும் இராஜாங்க கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X