2025 ஜூலை 16, புதன்கிழமை

நீர்த்தேக்கத்தில் மூழ்கி யாழ். இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

மஸ்கெலியா மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த  ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று  வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ். கைதடி பகுதியைச் சேர்ந்த  அருளானந்தன் டிலோஜன் (வயது 19) என்பவரே உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மஸ்கெலியா மொக்கா தோட்டத்திலுள்ள  தனது நண்பரின் வீட்டுக்கு வந்த இவர், நண்பரோடு நீராடிக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், தன்னுடன் நீராடிக்கொண்டிருந்த மேற்படி  நண்பர்  திடீரென்று நீரில் மூழ்கி  காணாமல் போயுள்ளதாக அவரின் நண்பர் மஸ்கெலியா பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் கடந்த 12ஆம்  திகதி யாழ்ப்பாணத்திலிருந்து மஸ்கெலியா பகுதியில் நண்பரின் வீட்டுக்கு  வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X