2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பொலிஸாரிடமே பணத்தை கறந்த கைதி

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தொலைபேசியில் அழைப்பை எடுத்து தன்னை உயர் பொலிஸ் அதிகாரியென அடையாளப்படுத்தி கொண்ட கைதியொருவர் அலைபேசி மூலம் பாரியளவில் பணம் கறந்த  சம்பவம் தொடர்பாக அலவத்துகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அலவத்துகொடை பொலிஸ் நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தான், பொலிஸ் உயர் அதிகாரி என்றும் வெளியில் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரியின் ஒருவரின் அலைபேசி இலக்கத்தை தருமாறு அழைப்பின் மறுபுறத்தில் இருந்தவர் கேட்டுள்ளார்.

அதன்படி வெளியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியின் அலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த இலக்கத்தை பெற்றுக்கொண்ட குறித்த நபர், அலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, தான் பொலிஸ் உயர் அதிகாரி என்றும் கொமியுனிகேஷன் (communication) இருக்கும் இடத்துக்கு செல்லுமாறு கேட்டுள்ளார்.

கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரியும் கொமியுனிகேஷனுக்கு சென்றுள்ளனர். தொடர்பை துண்டிக்காத அந்த நபர், கொமியுனிகேஷன் நிலையத்தின் உரிமையாளரிடம் அலைபேசியை ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

கொமியுனிகேஷன் உரிமையாளரிடம் அலைபேசியில் உரையாடிய மர்ம நபர் 10,000 ரூபாவை அலைபேசியில் பணம் பெறும் முறையில் (இலகு பணம் மாற்றும் முறை) பெற்றுக்கொண்டுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர் அதே அலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர், மீண்டும் ஒருமுறையும் அவ்வாறே அறிவுரை வழங்கியுள்ளார்.

அலைபேசியின் உரிமையாளரான பொலிஸ் அதிகாரிக்கு அதில், சந்தேகம் ஏற்பட அது தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளின் பிரகாரம், இந்த பண மோசடியில் ஈடுபடும் மர்ம நபர் தற்போது சிறைச்சாலையில் உள்ளதாகவும் அங்கிருந்தே இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபர், இவ்வாறு பல இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .