Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 76வது மேதினத்தில் பங்கேற்க அணி திரளுமாறு மலையக மக்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 76வது மேதினக் கூட்டம் தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்துக்கு, தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தலைவிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆரம்பகால அங்கத்தவர்கள் என அனைவரும் திரண்டு வந்து, சக்தியையும் பலத்தையும் வெளியுலகுக்கு காட்ட வேண்டுமென்று தொழிற்சங்கத்தின் சார்பில் அதன் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குநர்.எஸ்.ஜோதிக்கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஒடுக்கப்பட்ட மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க ரீதியிலும் அரசியல் ரீதியிலும் உருவெடுத்துள்ளது.
இன்று மக்களை தினமும் அலைக்கழித்து வரும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்காக மலையகமெங்கிலும் எமது கிளைக் காரியாலயங்கள் ஊடாக அவற்றுக்கான காத்திரமான பரிகாரங்களை தேடிவருகிறது.
தமது அமைப்பை பாதுகாக்க முடியாதவர்களுக்கும் மற்றவர்களை விமர்சித்து சாக்குப் போக்குச் சொல்லி மேதினத்துக்கு ஆள் திரட்டுபவர்களுக்கும் இம்முறை தலவாக்கலையில் நடைபெறவிருக்கும் இ.தொ.கா வின் மேதினம் பெரும் சவாலையும், பெரும் எச்சரிப்பையும், வயிற்றெரிச்சலையும் கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
75 மேதினங்களைக் கண்ட இ.தொ.கா விற்கு எவரும் பாடம் சொல்லித் தரத் தேவையில்லை. 76வது மேதினம் மலையக மக்களின் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது.
காரணம் உணர்வு பூர்வமாக வர்க்க சிந்தனைகளோடு கொண்டாடப் போகும் இம்மேதினத்தில் சகலரையும் பங்கேற்று எமது சக்தியை ஒன்றுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொழிலாளர்களின் நலததுக்காகவும் உயர்வுக்காகவும் ஏற்படுத்தப்பட்ட இ.தொ.கா, தமது இலட்சியத்திலிருந்து ஒரு அங்குலமேனும் தடம்புரளாது என்பதை நாம் ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றோம்.
உழைக்கும் வர்க்கத்தின் உன்னத நாளில் அனைவரையும் எமது மேதின விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுகின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago