2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மீரியபெத்தையில் வீடுகள் நிர்மாணிப்பதை துரிதப்படுத்தவும்: பி. திகாம்பரம்

George   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, கொஸ்லாந்தை மீரியபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

மீரியபெத்தையில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துகொடுக்கும் திட்டத்துக்கு அமைச்சர் பி.திகாம்பரத்தினால் மார்ச் மாதம் 01ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு 75 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த நிர்மாணப்பணிகள் அடிக்கல்லுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இது தொடர்பாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்துகொடுக்கும் பணிகளை முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. அந்த பணிகளில் ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின் அவை தொடர்பில் உடனடியாக தனது கவனத்துக்கு கொண்டுவருமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

அதனடிப்படையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காலதாமின்றி வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீரியபெத்தையில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பூணாகலை முகாமில் தற்போதும் இருக்கின்றன. அந்த அனர்த்தத்தினால் 37பேர் மரணமடைந்தததுடன் 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும் செயற்றிட்டம் அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டது. 

கட்டட ஆராய்ச்சி அமைப்பின் ஆலோசனையின் பிரகாரம், பண்டாரவளை, கொஸ்லாந்தை பூணாகலை வீதியில் மகள்தெனிய சந்திக்கு அருகிலுள்ள 9ஏக்கர் காணி, வீடமைப்புக்காக  பெற்றுக்கொள்ளப்பட்டு அதில், இந்த வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

இதனடிப்படையில் ஏழு பேர்ச் காணியில் 12.5 இலட்சம் ரூபாய் பெறுமதியில் இரண்டு அறைகள், விறாந்தை, மலசலக்கூடம் ஆகியவற்றை கொண்டு வீடு நிர்மாணிக்கப்படும். 

நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனையின் பேரில், ஸ்ரீ லங்கா இராணுவத்தின் பொறியியல் பிரிவு படையணி நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கின்றது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .